மாஸா, கெத்தா தல அஜீத் படத்தை இயக்கும் இயக்குனர் யார் தெரியுமா? அசத்தலான கதையுடன் காத்திருக்கும் பாக்ஸிங் டைரக்டர்..

Sudha Kongara Directing Thala Ajiith Next

by Chandru, Sep 21, 2020, 13:07 PM IST

தல அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தை தயாரித்த போனி கபூரே வலிமை படத்தையும் தயாரிக்கிறார். தீபாவளி ரிலீஸுக்கு திட்டமிட்டுத் தொடங்கப்படப் படம் கொரோனா ஊரடங்கால் தற்போது பொங்கலுக்காவது வருமா என்று டவுட்டாக இருக்கிறது. அநேகமாக அக்டோபர் மாதம் மீண்டும் ஷூட்டிங் தொடங்க விரைந்து படப்பிடிப்பை முடித்து மார்ச் அல்லது ஏப்ரலில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

அஜீத்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்குவார் என்று பேச்சு எழுந்த நிலையில் தற்போது அடுத்து அஜீத் நடிக்கும் படத்தைச் சுதா கொங்கரா இயக்குவார் என்று பேச்சு கோலிவுட்டில் எழுந்துள்ளது. ஏற்கனவே மாதவன் ரித்திகா சிங் நடித்த பாக்ஸிங் கதையான இறுதிச் சுற்று படத்தை இயக்கிய இவர் அடுத்து சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று படத்தை இயக்கி இருக்கிறார். ஏற்கனவே விஜய்க்காகச் சுதா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்து சொல்ல அதில் சில மாற்றங்களை விஜய் கூறிய நிலையில் அது அப்படியே பெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் அஜீத்துக்காக அதிரடியான ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்திருக்கிறார் சுதா. அஜீத்திடம் இதுபற்றி சுதா சொல்ல அவருக்கும் பிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சுதா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் வெளியானால் அது வேற லெவலில் இருக்கும் என்று இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். டிவிட்டரில் வீடியோவில் ரசிகர்களுடன் ஜி.வி.பிரகாஷ் மூலம் கலந்துரையாடினார். அப்போது அஜீத் ரசிகர் ஒருவர் அவரிடம் அஜீத்குமார் படத்தைச் சுதா கொங்கரா இயக்குவார? என்று கேட்டதற்கு, அந்த படம் வந்தா வேற லெவலில் இருக்கும் எனப் பதில் அளித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை