ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயருகிறது..!

by Nishanth, Sep 25, 2020, 18:50 PM IST

ரேசன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ₹1.50 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ₹15 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் விலையை உயர்த்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்த உத்தரவைத் தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளா் சஜன்சிங் சவாண் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது: பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணை விற்பனை விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால் நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ₹1.50 உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ₹15-லிருந்து ₹16.50 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு அக்டோபா் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தனது உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரேசன் கடைகளில் அனைவருக்கும் அரிசி, பருப்பு போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை