எஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது

by Chandru, Sep 25, 2020, 20:20 PM IST

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அனுமதிக்கப் பட்டார். அவரே வீடியோவில் தோன்றி தனக்கு கொரோனா தொற்று ஏறபட்டுள்ளதால் சிகிச்சைகாக மருத்து வமனையில் சேர்வதாகவும் யாரும் போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறினார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சில நாட்களில் உடல்நிலை கவலைக்கிட மானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி வென்டிலேட்டர் மர்றும் எக்மோ சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மயக்கநிலைக்கு சென்றார் எஸ்பிபி.

பாடகர் எஸ்பிபி குணம் அடைய வேண்டும் என்று திரையுலகினர் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை செய் தனர். டாக்டர்கள் வெளிநாடு டாக்டர் களிடம் வீடியோ கன்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சை அளித் தனர். அதில் அவரது உடல்நிலை படிப்படியாக குணம் அடைந்தது. மயக்க நிலையிலிருந்து மீண்டு குடும்பத்தினர், டாக்டர்களிடம் சைகை மூலம் பேசினார். பிஸியோதெரபி சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு அளித்து பயிற்சிகள் செய்தார்.

எஸ்பிபி மகன் சரணும் தனது தந்தைக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டார் ஆனாலும் சுவாசம் சீராகவில்லை நுரையிரல் சீராவதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதால் அவருக்கு வென்ட்டிலேட்டரில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தரப்படுகிறது என்றார்.

பாடகர் எஸ்பிபி எப்படியும் குணம் அடைந்து விடுவார் என்று எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவரது உடல் நிலை கவலைக்கிடமானது வென்ட்டி லேட்டர் சிகிச்சைக்கு நுரையீரல் ஒத்து ழைக்கவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உயிரை காக்க விடிய, விடிய டாக்டர்கள் போராடினார். ஆனாலும் சிகிச்சை பலனில்லாமல் மதியம் 1.04 மணிக்கு எஸ்பிபிஉயிர் பிரிந்தது.

பின்னர் அவரது உடல் கண்ணடி பெட்டியில் வைத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு வேன் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ரசிகர்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் இப்படி கூட்டம் சேர்வது கொரோன பரவலுக்கு வழி வகுக்கும் எனவே எஸ்பிபி உடலை செங்குன்றம் அருகே உள்ள தாமரைப் பாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி குடும்பத்தினரிடம் போலீ ஸார் கேட்டுக்கொண்டன்ர். அவர்கள் நாளை எடுத்துச் செல்வதாக தெரிவித் தனர். ஆனால் கூட்டம் அதிகம்வருதற் குள் இன்று இரவே உடலை கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டனர் இதையடுத்து எஸ்பி பி உடல் தாமரைப் பாக்கம் இரவோடு இரவாக பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நாளை காலை 10 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படு கிறது.
எஸ்பிபி உடல் அரசு மரியதையுடன் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

திரையுலகினர் எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்த்தநிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக அவர்கள் தங்களது இரங்கலை சமூக வலை தளங்களில் தெரிவித்துள்ளனர். யாரும் நேரில் வருவதுபோல் அறிகுறி தெரிய வில்லை.

Get your business listed on our directory >>More Tamilnadu News

அதிகம் படித்தவை