நெல்லை தச்ச நல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை..!

by Balaji, Sep 26, 2020, 16:58 PM IST

நெல்லை தச்ச நல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் . இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார் . இவரது மனைவி வடிவு, இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. வடிவுக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது 4-வது முறையாகக் கருவுற்று ஐந்து மாதம் ஆன நிலையில் எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்ததில் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் கடும் மனவேதனையில் இருந்துள்ளனர் . குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் இருந்த இருவரும் நேற்று இரவு இருவரும் வீட்டிற்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

காலையில் அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்த போது இருவரும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தச்ச நல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர் . காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பேரின் உடலையும் மீட்டு பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை