14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

by Balaji, Sep 27, 2020, 18:10 PM IST

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

எஞ்சிய கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்தில் சேலம், கிருஷ்னகிரி, தருமபுரி, மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, வங்கக் கடலின் மத்திய கிழக்கு, தென் மேற்கு பகுதி, அந்தமான் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும்.மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Tamilnadu News

அதிகம் படித்தவை