தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

திருவெற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 7 வரை இடைத்தேர்தல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பீகாரில் சட்டப்பேரவைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அண்மையில் கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது குறித்து வழிகாட்டு நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நட... நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்பில், “பீகார் சட்டப்பேரவை தேர்தலோடு, காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியின் பெயர்கள் இடம்பெறவில்லை. கடந்த பிப்ரவரியில் காலியான குடியாத்தம் திருவொற்றியூர் தொகுதிகள் மட்டுமே இடைத்தேர்தல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன தற்போதைய சட்டப்பேரவைக்கு இன்னும் 7 மாதங்களே ஆயுட்காலம் இருப்பதால் இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... நடத்தப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவேண்டிய ஓராண்டுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றால், அதைத் தலைமைத் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்ப... பாதிப்பு உள்ள சூழலில் இடைத் தேர்தலை நடத்தப்பட வேண்டாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு தலைமைச் செயலாளர் க.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார் .

இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “கொரோனா காலத்தில் இடைத்தேர்தல் வைத்தால் நோய்த் தொற்று அதிகரிக்கும். எனவே அந்த எண்ணத்தில்தான் அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்...இந்த நிலையில்தான் இன்று திடீரென இடைத்தேர்தல் இல்லை என்று அறிவிப்பு வந்துள்ளது.

இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம், அசாமில் ரங்கபாரா, ஷிப்சாகர், கேரளாவில் குட்டநாடு, சவாரா, மே.வங்கத்தின் பலகட்டா சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்துவதில் கடினம் மற்றும் சில பிரச்சனைகள் உள்ளதாக 4 மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம், கேரளா, தமிழகம் மற்றும் மே.வங்க அரசுகளின் பதவிக்காலம் 31.05.2021, 01.06.2021, 24.05.2021, 30.05.2021 அன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட 7 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!