“ஆல் இன் ஒன்”வாழைத்தண்டு சூப்!!சூட சுட சூப் தயாரிப்பது எப்படி??

how to make soup in tamil

by Logeswari, Sep 29, 2020, 16:37 PM IST

அனைத்து காய்கறி சேர்த்து தயாரிக்கும் சூப்பை விட வாழைத்தண்டு சூப்பில் அதிக ஆரோக்கிய சத்துக்கள் உள்ளது.இதனை மழைக்காலத்தில் சூடாக குடித்தால் அமிர்தமாக இருக்கும்.இந்த சூப்பை வாரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் சளி,தொண்டை எரிச்சல் ஆகியவையில் இருந்து விடிவு காணலாம்.இந்த ஒரு காய்கறி போதும் உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்தையும் பெறலாம்.சரி வாங்க வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்….

தேவையான பொருள்கள்:-

வாழைத்தண்டு-1 கப்

தனியா-3 ஸ்பூன்

சீரகம்-3 ஸ்பூன்

மிளகு-3 ஸ்பூன்

வெங்காயம்-2

தக்காளி-1

கொத்தமல்லி-சிறிது

கறிவேப்பிலை-சிறிது

இஞ்சி-சிறிது

பூண்டு-2 பல்

எண்ணெய்-தேவையான அளவு

மஞ்சள் தூள்-2 ஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

மிளகு தூள்-2 ஸ்பூன்

செய்முறை:-

முதலில் வாழைத்தண்டை சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் வாழைத்தண்டை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

ஒரு வாணலியில் தனியா,சீரகம், மிளகு,வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு,கொத்தமல்லி,கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.மிக்சியில் வறுத்த கலவையை அரைத்து கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு அதில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு கொதிக்க வைத்த வாழைத்தண்டு, மஞ்சள்தூள்,தேவையான அளவு சேர்த்து ஒரு 10 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

10 நிமிடம் கழிந்த பிறகு கடைசியில் கொத்தமல்லி தூவினால் சூடான,சுவையான,ஆரோக்கியமான,வாழைத்தண்டு சூப் தயார்..

தேவைப்பட்டால் சுவைக்கு மிளகு தூள் கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்…Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Samayal recipes News

அதிகம் படித்தவை