கொரானா ஊரடங்கு நாடு முழுவதும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது. தமிழகத்தில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே இயங்கி வந்த சிறப்பு ரயிலில் தவிர மேலும் ஐந்து ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநிலத்திற்குள் மற்றும் கேரளாவிற்கு இயக்கும் முக்கிய ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
தெற்கு ரயில்வே இதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டுள்ளது. அதன் சேவை தொடங்கும் நாட் கள் குறித்த விவரமும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்குள் இயங்கும் ரயில்கள்:
1. 02631/32 சென்னை எழும்பூர்- திருநெல்வேலி- சென்னை எழும்பூர்
திருநெல்வேலியில் இருந்து - 02.10.2020
சென்னை எழும்பூரில் இருந்து- 05.10.2020
2. 02661/62 சென்னை எழும்பூர்- செங்கோட்டை- சென்னை எழும்பூர்
சென்னை எழும்பூரில் இருந்து- 03.10.2020
செங்கோட்டையில் இருந்து- 04.10.2020
3. 02613/14 சென்னை எழும்பூர்- மதுரை- சென்னை எழும்பூர்
சென்னை எழும்பூரில் இருந்து- 02.10.2020
மதுரையில் இருந்து- 02.10.2020
4. 02205/06 சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர்
ராமேஸ்வரத்தில் இருந்து- 02.10.2020
சென்னை எழும்பூரில் இருந்து- 05.10.2020
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இயங்கும் ரயில்கள்:
5. 06723/24 சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் சென்ட்ரல்- சென்னை எழும்பூர்
சென்னை எழும்பூரில் இருந்து- 03.10.2020
திருவனந்தபுரத்திலிருந்து- 04.10.2020
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.