அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா

Famous actress who became a goddess in the worship room of the fans

by Logeswari, Sep 30, 2020, 20:19 PM IST

சில ஆண்டுகளாக நயன்தாரா அவர்கள் தமிழ் திரைப்பட உலகில் நம்பர் 1 ஆகவும் யாரும் அசைக்க முடியாத இடத்திலும் இருந்து வருகிறார்.நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.அவர் எந்த படத்தில் நடித்தாலும் ரசிகர்கள் நயன்தாராவிற்காகவே திரையரங்கு சென்று திரைப்படத்தை கண்டு களிப்பார்கள்.இதே போல் அந்த காலத்திலும் நம்பர் 1 நடிகை இருந்துள்ளார்.அவருக்கும் ரசிகர் பட்டாளம் அதிகம்.அவருக்காக ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர்.ஆமாங்க நம் குஷ்பூ தான்.அந்த காலகட்டத்தில் கதாநாயகர்கள் தங்களது நடிக்கும் படத்தில் ஜோடியாக குஷ்பூ இருக்க மாட்டாரா என்று ஏங்குவார்களாம்.

நயன்தாரா அவர்கள் காதல்,பேய் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை அசத்தியுள்ளார்.அடுத்ததாக புதிய அவதாரத்தில் ரசிகர்களை கவர வருகிறார்.தற்பொழுது நயன்தாரா அவர்கள் ஐசரி கணேஷ் இயக்கத்தில் உருவாகி வருகின்ற 'மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படத்தில் அம்மன் கடவுளான வேடத்தில் நடித்து வருகின்றார்.இதனால் ரசிகர்கள் அம்மன் வேடத்தில் உள்ள நயன்தாராவை தங்களது வீட்டின் பூஜையறையில் வைத்து கடவுளாய் வழிப்பட்டு வருகின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை