திருப்பதி என்றால் லட்டு பழனி என்றால் , பஞ்சாமிர்தம் ஆகியவையே நினைவுக்கு வரும். இந்த அளவுக்கு இரண்டும் உலக அளவில் பிரசித்தி பெற்றவை.இத்தகைய பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தானியங்கி எந்திரங்கள் மூலம் கோயில் நிர்வாகத்தால் நேரடியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இதற்காக வின்ச் நிலைய வளாகத்தில் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாமிர்தம் தயாரிக்க ஆண்டிற்கு சுமார் 2 ஆயிரம் டன் வாழைப்பழங்கள் கோயில் நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு பழங்களைக் கொள்முதல் செய்வது குறித்த ஏலம் கோவில் வளாகத்தில் நடந்தது.
திண்டுக்கல் ரோடு பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு வாழைப்பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகச் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு வாழைப்பழங்கள் குறைவான விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.பஞ்சாமிர்தம் தயாரிக்கக் கற்பூரவல்லி, குடகு, மலைவாழை மற்றும் பூவன் ஆகிய நான்கு வகையான வாழைப் பழங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு கற்பூரவல்லி பழம் ஒரு கிலோ ரூ 35 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த ஆண்டு ரூபாய் இது 21 ரூபாய் 50 காசுக்கு ஏலம்போனது. சென்ற ஆண்டு ஏலம் போன குடகு ரக வாகை பழம் கிலோ ரூபாய் 37க்கு ம் இந்த ஆண்டு 35 ரூபாய்க்கு ஏலம் போனது.பஞ்சாமிர்தத்திற்கு தனி ருசியை அளிக்கும் மலைவாழைப்பழம் கடந்த ஆண்டு கிலோ 83 ரூபாய் 65 பைசாவிற்கு ஏலம் போனது. இந்த ஆண்டு கிலோ 80 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்தாண்டு கிலோ 16 ரூபாய்க்கு ஏலம் போன பூவன் பழம் ரூபாய் இப்போது 11 ரூபாய் 70 பைசாவிற்கு ஏலம் போனது.
இப்படிக் குறைவான விலைக்கு ஏலம் போனதால் பழநி கோயிலுக்கு சுமார் ரூபாய் 2 கோடி அளவிற்கு நிச்சயமாக நிச்சயமாகி உள்ளதாகக் கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.