நிறுத்தி வைக்கப்பட்ட கிராமசபை கூட்டங்களை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய தினங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படும். கடந்த மே 1ஆம் தேதி நடக்கவேண்டிய கிராம சபை கூட்டம் கொரானா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கொரானா தொற்று பரவலை காரணம் காட்டி கிராமசபை கூட்டங்களை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.இந்தக் கூட்டத்தில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருந்தாள் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்ததாகவும் மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்தே கிராமசபை கூட்டங்கள் கடைசி நேரத்தில் தமிழக அரசு தடை செய்து விட்டது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் போட்டி கிராமசபை கூட்டங்களில் நடத்தினர் அதில் மத்திய அரசின் வேளாண்மை மசோதாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சென்னை புறநகர் பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதனிடையே கொரானா ஒரு டங்கை கட்டி கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏற்கத்தக்கதல்ல. எனவே ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டத்தை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி அருண் அய்யனார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை முறையீட்டு மனுவை தாக்கல் செய்தால் விசாரிக்க இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.