2 மாதத்தில் ஹீரோவின் உடலை உருக்கிய நோய்.. எலும்பும் தோலுமானதால் ரசிகர்கள் கவலை.

Actor Sanjay Dutt new look: Fans get shock

by Chandru, Oct 5, 2020, 17:52 PM IST

கொரோனா காலகட்டத்தில் சில நடிகர்கள் அதிர்ச்சி மரணம் அடைந்தனர். இரண்டு மாதத்துக்கு முன் பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான்கான் அடுத்தடுத்து மரணம் அடைந்து திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

முன்னதாக இவர்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக அமெரிக்கா சென்று திரும்பி வந்த சுமார் ஒரு வருடத்தில் தங்கள் இன்னுயிரை இழந்தனர். கொரோனா அச்சுறுத்தலால் அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட முடியாத நிலையில் சமூக வலை தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.


பாலிவுட்டில் மற்றொரு பிரபல நடிகர் சஞ்சய்தத். பல வெற்றிபடங்களை தந்ததுடன் வயதானாலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். இரண்டு மாதத்துக்கு முன் திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் தொற்று இல்லை என்று தெரியவந்தது. இதனால் அவரும், ரசிகர்களும் நிம்மதி அடைந்தனர். மூச்சு திணறல் குணமாகி வீடு திரும்பினார்.
சந்தோஷமுடன் வீடு திரும்பிய சஞ்சய் தத்துக்கு நுறையீரலில் கேன்சர் நோய் முற்றிய நிலையில் இருப்பதாக மருத்துவமனை தகவல் வெளியானது. இதையடுத்து கேன்சர் நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார் சஞ்சய். அதுபற்றி அவரே அறிவித்துவிட்டு சென்றார் குணம் ஆகும் வரை படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் சஞ்சய் தத்தின் புதிய தோற்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதைக்கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருக்கின்றனர். வாட்ட சாட்டமாக இருந்த சஞ்சய் தத் தற்போது எலும்பும் தோலுமாக உடல் உருகி ஒல்லிபிச்சானாக பரிதாப தோற்றத்தில் இருக்கிறார். அதுதான் பலருக்கும் கவலை அளித்திருக்கிறது. சஞ்சய் தத் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை பகிர்ந்து வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை