ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம்: குமரி மாவட்டத்தில் போஸ்டர்களால் பரபரப்பு.

Hadras Violence Incident: Poster Stir in Kumari District

by Balaji, Oct 5, 2020, 19:21 PM IST

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் குறித்து, குமரி மாவட்டத்தில் அவதூறு பரப்பி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக .காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ராஸில் , தலித் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாடு முழுவதும் இச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இந்த சம்பவத்துக்கு பாஜக அரசின் மெத்தமான நடவடிக்கையே காரணம் என பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், தமிழக பாரதிய ஜனதா கட்சியோ, ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்துக்கு காங்கிரசே காரணம் என குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக குமரி மாவட்தத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில்,
உத்தரபிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கயவர்களால் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண் செல்வி.மணிஷாவுக்கு கண்ணீர் அஞ்சலி என்ற வாசகணக்கள் இடம் பெற்றுள்ளது. இது பாஜகவின் அடாவடி செயல் என்றும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


காங்கிரஸ் மீது அவதூறு பரப்பும் தமிழக பாரதிய ஜனதா கட்சியை யை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துஉள்ளது.
இதுதொடர்பாக மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிட ம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில், குமரி மாவட்ட பாஜகவினர் திட்டமிட்டே இது போன்ற வதந்தியை பரப்புகின்றனர் என்றும் , இது காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை எற்படுத்தும் . எனவே, இதுபோன்ற வதந்திகளை பரபப்பு வோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம்: குமரி மாவட்டத்தில் போஸ்டர்களால் பரபரப்பு. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை