சோம்பேறிகளுக்கு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் லாக்டவுன்தான் , வேலை என்றால் அலுத்துக்கொள்வார் கள். ஆனால் உழைப்பாளிகளுக்கு லாக் டவுனும் வேலை நாள்தான். உழைப்பாளி பட்டியலில் இணைந்தவர் சமந்தா.
பட ஷூட்டிங்கிற்காக ஊரு விட்டு ஊரு, நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் தாண்டி பறந்துக்கொண்டே இருப்பவர் சமந்தா. கொரோனா லாக்டவுன் என்றதும் தனது வேலையை வீட்டுக்குள்ளேயே அதிகப்படுத்திக்கொண்டார். யோகா கலை, சமையல் கலை, தோட்டக் கலை, உடை டிசைனிங் கலை என பல கலைகளை கற்றுக்கொண்டார். எல்லாவற்றையும் பரிட்சித்தும் பார்க்கிறார். தற்போது சமந்தாவின் கவனம் சமையல் கலையில் இருக்கிறது. வாரம் ஒரு புது சமையல் அதுவும் சத்தான சமையல் என்று சமைத்து தங்களது தோழிகளுக்கும் குடும்பதாருக்கும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ஓட்ஸ் கேரட் இட்லி சத்தான வகை உணவை சமைத்து தெலுங்கு நடிகர் ராம் சரண் மனைவு உபசானாவுக்கு பரிமாறினார். உபசனாவும் தொழில் அதிபராக இருந்து வருகிறார். சமந்தா சமைத்த இட்லியை சாப்பிட்டு ருசித்த உபசனா ரொம்ப சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என தமிழில் பாராட்டுக்களை வீடியோவில் தெரிவித்தார்.
சிறந்த சமையல் நிபுணர் ஆகிவிட்டீர்களே என சமந்தாவுக்கு ரசிகர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.