ரூ. 824 கோடி மோசடி செய்த கனிஷ்க் நடைக்கடை முதலாளியின் வீடு ஏலம்!

வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கனிஷ்க் நகைக்கடை நிறுவனர் பூபேந்திர ஜெயினின் சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Mar 23, 2018, 10:35 AM IST

வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கனிஷ்க் நகைக்கடை நிறுவனர் பூபேந்திர ஜெயினின் சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தங்க நகை தயாரிப்பு நிறுவனமான கனிஷ்க் சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரஷாந்த் டவர்ஸில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளை மோசடி செய்து ரூ. 824 .15 கோடி கடன் பெற்றுள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

முதன் முறையாக கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியே இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த ஆண்டு ஜனவரி அனைத்து வங்கிகளும் முறைகேடு செய்துள்ளதாக புகார் அளித்துள்ளன. இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிபிஐ இணை இயக்குனருக்கு 16 பக்கங்கள் அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று பூபேஷ் குமார் ஜெயினை மத்திய கலால் வரித்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ரூ.20கோடி ஜிஎஸ்டி வரித்தொகையும் கட்டவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி நீதா ஜெயின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், புதன்கிழமையன்று இரவு சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் நீதா ஜெயினை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்காக பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம், சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள பூபேஷ்குமார் ஜெயினுக்கு சொந்தமான 2 வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் 7 பேர் சோதனை நடத்தினர். இதில் அவருடைய வீடுகளில் இருந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

ஓராண்டாக வங்கிகளுக்கு கடன் தொகை பாக்கி இருப்பதோடு வட்டியும் சேர்த்து ரூ. 1000 கோடி நிலுவைத் தொகை இருப்பதால் பூபேஷ் குமார் கொடுத்த ஷ்யூரிட்டி சொத்துகளை கையகப்படுத்தும் பணிகளை வங்கிகள் தொடங்கியுள்ளன. வியாழனன்று பூபேஷ்குமாரின் வீட்டிற்கு வந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வீட்டை ஏலம் விடுவதற்கான நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ரூ. 824 கோடி மோசடி செய்த கனிஷ்க் நடைக்கடை முதலாளியின் வீடு ஏலம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை