ரவுடிகள் கேக் வெட்டி கொண்டாடியது தொடர்பாக சட்டப்பேரவையில் துரைமுருகன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, குத்து, வெட்டு என்று சட்டம்- ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகி விட்டது என்றும் ரவுடிகள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடும் வகையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது” என்றும் விமர்சனம் செய்தார்.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ரவுடிகள் ஒரே நாளில் உருவாகக் கூடியவர்கள் அல்ல. உங்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களை கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததால் வெளி மாநிலங்களுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள். அதனால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது” என்று பதிலளித்தார்.
மீண்டும் பேசிய துரைமுருகன், “திமுக ஆட்சியில் ரவுடிகள் கைது செய்யப்படவில்லை என்றாலும் கேக் வெட்டிக் கொண்டாடியது இந்த ஆட்சியில்தான். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது பேசாத ஈபிஎஸ் இப்போது நன்றாகப் பேசுகிறார். ஆட்சி மாறினாலும், நிதித்துறை செயலாளர் சண்முகம் மட்டும் இன்னும் மாறவில்லை என்றும் அவர் கூறியபோது பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.