மீண்டும் பம்பரம் சுழற்ற தயாரான வைகோ!

Vaiko ready to spin Bambaram again!

by Loganathan, Oct 10, 2020, 15:31 PM IST

ம.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள், கடந்த மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்தார். இதன் மூலம் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது " தமிழகத்தில் வரும் 2021 சட்டசபைத் தேர்தலில் ம.தி.மு.க., தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்" என்று கூறியுள்ளார். மேலும் " நான் இலட்சியத்திற்காக வாழ்பவன் என்பது எனது இலட்சக்கணக்கான தொண்டர்களுக்குத் தெரியும். என்னைப்பற்றி ஒரு சில நாளிதழ்கள் நஞ்சை கக்கி வருகின்றன, அதில் எள்ளளவும் உண்மையில்லை. மேலும் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட ஒப்புக் கொண்டதாக வெளிவரும் செய்தியிலும் உண்மை கிடையாது.

நான் பதவிகளுக்காக வாழ்பவன் இல்லை என்றும் எள்ளி நகையாடினார். எனினும் திமுகவின் கூட்டணியில் மதிமுக தொடரும் எனவும் கூறியுள்ளார்.மேலும் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுக இந்தமுறை மரண அடிவாங்கும் என்று கூறியுள்ளார். முன்னாள் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தபோது திமுகவைச் சாடியது போல, இப்போது அதிமுகவை விமர்சிக்கிறார் இந்த கோபால் என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை