பழங்குடி பெண்ணாக மாறிய ரஜினி ஜோடி நடிகை..

by Chandru, Oct 10, 2020, 16:03 PM IST

ஹீரோயின்கள் மனம் விட்டுப் பேச சில தோழிகளுடன் நெருக்கமாக பழகுகின்றனர். அவர்களிடம் தங்களின் அந்தரங்க விஷயங்கள். ரகசியங்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர். மதராஸ பட்டணம் படத்தில் நடித்தவர் எமி ஜாக்ஸன். இவருக்கும் நெருங்கிய தோழி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் அனா டனாகா. எமி ஜாக்ஸன் தமிழில் தங்கமகன், தாண்டவம்., ஐ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ரஜினியுடன் அவர் நடித்த 2.0 படம் திரைக்கு வந்தது. சில இந்தி படங்களிலும் எமி நடித்திருந்தார்.

பின்னர் லண்டன் சென்றவர் தனது நீண்ட நாள் பாய் பிரண்டும் காதலனுமான ஜார்ஜ் பனயியோட் உடன் நெருக்கமாகப் பழகினார். இதில் கர்ப்பம் ஆனார். திருமணத்துக்கு முன்பே குழந்தையும் பெற்றுக் கொண்டார் எமி. தற்போது அந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்து விட்டது. குழந்தையின் பிறந்த தினத்தை ஜாம் ஜாம் என்று கொரோனா கட்டுப்பாடுகளுடன் கொண்டாடினார். மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பது பற்றி எமி உறுதியாக தெரிவிக்காவிட்டாலும் லண்டனில் ஆங்கில நாடகங்கள், வெப் சீரிஸ்களில் நடிக்கிறார்.

எமியின் தோழிக்கு அனா டனகாவுக்கு பிறந்த நாள். அவர் உடனிருந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எமி கலந்து கொண்டதுடன் வித்தியாசமான முறையில் இருவரும் மேக்கப் அணிந்தனர். நெற்றியிலும் முகத்திலும் பழங் குடியினர் பெயின்டால் ஓவியம் வரைந்து கொள்வது போல் வரைந்து தன்னை அழகு படுத்திக் கொண்டார். அவரது தோழி நெற்றியிலும், கழுத்துக்குக் கீழும் கோலம் வரைந்து கொண்டார். அதே தோற்றத்தில் இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் நெட்டில் வைரலாகி வருகிறது. அதற்கு ஏகத்துக்கு கமென்ட்ஸும் குவிகிறது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News