தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அ.இ.அ.தி.மு.க இளைஞர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நாசரேத் அ.இ.அதிமுக அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2021 தேர்தலில் தமிழ்நாடு முதல் வெற்றியாக திருச்செந்தூர் தொகுதியை வெற்றி பெற வைப்பது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 13 ம் தேதி தூத்துக்குடி வருகை தருவதை ஒட்டி உற்சாக வரவேற்பு செய்ய வைப்பது, நாசரேத்தில் அடிப்படை வசதி செய்து கொடுப்பது, நாசரேத்தில் புதிதாக 5000 கழக உறுப்பினராகச் சேர்க்கை செய்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் நாசரேத் இளைஞர் அணி செயலாளர் கராத்தே டென்னிசன் வரவேற்புரை ஆற்றினார். நாசரேத் பேரூராட்சி கழக செயலாளர் கிங்சிலி அவர்கள் தலைமை வகித்தார். ஆழ்வை ஒன்றிய மேற்கு செயலாளர் ராஜநாராயணன், ஆழ்வை ஒன்றிய தெற்கு செயலாளர் விஜயகுமார், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ஞானையா முன்னிலை வகித்து ஆலோசனை வழங்கினார்கள் . இதில் ஆழ்வை ஒன்றிய தெற்கு மகளிர் அணி செயலாளர் ஜூலியட, நகர அவைத்தலைவர் சிவசுப்பு, இணைச் செயலாளர் கோமதி, நகர துணைச் செயலாளர் முருகேசன், அம்மா பேரவை நகரச் செயலாளர் தினகரன், இளைஞர் பாசறைச் செயலாளர் ஜெயக்குமார், மாணவர் அணி செயலாளர் அர்ஜுன்சங்கர், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திருமலைவாசன், மகளிர் அணி கிருபா, வார்டு செயலாளர்கள் சரவணன், செல்வக்குமார், ராஜ்குமார், ரமேஷ் இளைஞர் அணி துணைத்தலைவர் ஹரி, இணைச் செயலாளர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்