நீட் தேர்வு : தமிழக மாணவர் முதலிடம்

by Balaji, Oct 17, 2020, 09:48 AM IST

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வில் வெள்ளக் கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.நாமக்கல் தனியார் பயிற்சி மையத்தில் படித்த இவர் இந்திய அளவில் 8வது இடத்திலும் ஓ.பி.சி பிரிவில் இந்திய அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.நாமக்கல் மாணவி மோகன பிரபா 705 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், தேசிய அளவில் 52வது இடமும் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 48.57 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 57.44 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். 99,610 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 48.57% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 8.87 சதவீதம் அதிகரித்து 57.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :