சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகரில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. அமராவதி நகர் சைனிக் பள்ளியில் அடுத்த கல்வியாண்டில் சேர நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9ம் வகுப்புகளில் சேர்வதற்குத் தேசிய அளவில் போட்டி தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 19ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நுழைவுத் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி வரை வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் 6ம் வகுப்பில் பெண் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளப் பள்ளியின் இணைய தளம் www.sainikschoolamaravathinagar.edu.in.

தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://aissee.nta.nic.in
என்ற online முகவரியில் விண்ணப்பிக்கலாம் .

Advertisement

READ MORE ABOUT :

/body>