“காப்பர் உனக்கு... கேன்சர் எனக்கா...?” அதிர்ந்தது தூத்துக்குடி... மெரினாவை மிஞ்சும் மக்கள் போராட்டம்

மெரினாவை மிஞ்சும் மக்கள் போராட்டம்

Mar 24, 2018, 22:30 PM IST

ஸ்டெர்லைட் நச்சு ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், இன்று தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்றைய நாளில், மாபெரும் மக்கள் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, சில தினங்களாக அதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டு வந்தது. அதன்படி இன்று காலை முதல் பல இடங்ளில் கடைகள் அடைக்கப்பட்டன. மாலை 4 மணி முதல், தூத்துக்குடி வி.வி.டி கோல்டு சிக்னல் அருகே திரளான மக்கள் கூடத் தொடங்கினர்.

தற்போது தங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பை, அகிம்சை வழி போராட்டத்தின் மூலம் உலகுக்கு உணர்த்தி வருகிறார்கள். இன்றைய போராட்த்தில் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றினைந்து, தூத்துக்குடியையே அதிர வைத்துள்ளனர்.

பெண்கள் பலர் துணிந்து வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள், “காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா..?” என்பது போன்ற பல வகையான வாசகங்களையும், பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் கூட்டம் அதிகமாகி விடக் கூடாது என்பதற்காக, காவல்துறையினர் செல்போன் சிக்னல்களை துண்டித்து விட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இரவு வரை போராட்டம் நீடித்தால் மின்சாரமும் துண்டிக்கப் பட வாய்ப்புள்ளது. மேலும், போராட்டத்திற்கு தண்ணீர் சப்ளை செய்யும் ஒருசில தண்ணீர் பாட்டில் நிறுவனங்களுக்கு ஸ்டெர்லை நிர்வாகத்திடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும், ஜல்லிக்கட்டு லெவலுக்கு நடைபெறும் இந்த போராட்டத்தின் மீது, மீடியாக்களின் வெளிச்சம் ஆழமாக விழுந்தது போல் தெரியவில்லை. மீடியாக்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது, ஊடக தர்மமும் விலை போயிருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த வருடம் மாட்டுக்காக மெரினாவில் புரட்சி செய்த இளைஞர்களைப் போல், இன்று நாட்டுக்காக, தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் காப்பதற்காக... காப்பர் கம்பெனியை எதிர்த்து, அங்குள்ள மக்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.

இப்படி நாட்டை சுடுகாடாக்க முயலும், ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு எதிராக மக்கள் வீதி இறங்காவிட்டால்... நாளை வீதியில் கூட இறங்க முடியாத நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்பதே நிதர்சனம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading “காப்பர் உனக்கு... கேன்சர் எனக்கா...?” அதிர்ந்தது தூத்துக்குடி... மெரினாவை மிஞ்சும் மக்கள் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை