108 ஆம்புலன்ஸ்களை அழைக்க விரைவில் புதிய மொபைல் செயலி அறிமுகம் : அமைச்சர் தகவல்.

New mobile app to be introduced soon to call 108 ambulances: Minister Info

by Balaji, Oct 18, 2020, 17:39 PM IST

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களை அழைக்கவும் ஆம்புலன்ஸ் எங்கு, எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை கண்காணிக்கவும் புதிய மொபைல் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய செயலியை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மொபைல் செயலி நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓலா மற்றும் ஊபர் செயலிகளை போல் இந்த செயலி மூலம் ஆம்புலன்ஸ்களை அழைக்கும் நபர்கள் அது எங்கு வருகிறது என்பதையும் நேரடியாகக் கண்காணிக்க முடியும். இதன் மூலம் மீண்டும் மீண்டும் அவசர உதவி எண்ணுக்கு அழைக்க வேண்டிய கட்டாயம் தவிர்க்கப்படும். ஆம்புலன்ஸ்கள் எங்கு வருகிறது என்று கேட்டு மக்கள் அடிக்கடி அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டபடி இருப்பதால் புதிதாக ஆம்புலன்ஸ் உதவி கேட்டு அழைப்பவர்களுக்கு உரிய நேரத்தில் தொடர்பு கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் அழைப்புகளில் 20,000 அழைப்புகள் மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டவை. இதற்காக அடிக்கடி அவசர உதவி எண்ணை அழைக்கக்கூடாது என சொல்ல அதிகாரிகளால் முடியாது.இந்த சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு இந்த மொபைல் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Tamilnadu News

அதிகம் படித்தவை