விரும்பிய பாடத்தை படிக்க தடை விதித்த பெற்றோர்கள் விரக்தியில் பெற்றோரின் பெயரில் புகார் அளித்த பெண்..

a girl filed case against parents

by Logeswari, Oct 19, 2020, 20:29 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில், விரும்பிய பாடம் கற்கமுடியவில்லை என்று தந்தையின் மேல் புகார் அளித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் வசிப்பவர் விஜயபாஸ்கர் இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு தனுஸ்ரீ மற்றும் யாமினிஸ்ரீ என்று இரண்டு பெண்கள் உள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற +2 தேர்வில் தனுஸ்ரீ தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவரின் தந்தை, மகளுக்கு படிக்க விருப்பம் இல்லாத பி.ஸ்.இ வேதியல் அல்லது இயற்பியல் பாடங்களை கற்கச்சொல்லி கட்டாயப் படுத்தியுள்ளார். இதனால் மகளுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் சண்டையில் முடிந்தது. இதனால் மனம் உடைந்த தனுஸ்ரீ வாட்ஸ் அப் மூலம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தந்து பெற்றோர் மீது புகார் தெரிவித்துள்ளார். இதனால் போலீஸ் விஜயபாஸ்கரிடம் விசாரித்து அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை