நாளை முதல் 45 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் : தமிழக அரசு ஏற்பாடு

Tamil Nadu govt arrange to sell அ kilo of onion for 45 rupees from tomorrow:

by Balaji, Oct 20, 2020, 17:40 PM IST

சென்னையில் நாளை முதல் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்பனை செய்வதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை படிப்படியாக அதிகரித்து கிலோ 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மழை காரணமாக வட மாநிலங்களிலிருந்து வெங்காயம் வரத்து குறைந்ததன் காரணமாக விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் இந்த விலை உயர்வு காரணமாகப் பசுமை அங்காடிகளில் வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாகச் சென்னை நகரில் உள்ள பண்ணை பசுமை அங்காடிகளில் ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை