வடமாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காயம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் கிலோ ரூ.100ஐத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இன்று வெங்காயத்தின் விலை ரூ.130. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். எனினும் இதனை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சில இடங்களில் ரூ.50க்கு வெங்காயத்தை விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே, வெங்காய விலை குறித்து தமிழக அரசை கடுமையாக சாடி இருக்கிறார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.
இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில், ``நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், #OnionPrice-ஆல் தாய்மார்களும் கண்ணீர் விட களிநடம் போடுகிறது அதிமுக அரசு!. வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும்!. வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்! அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை!" என்று பதிவிட்டுள்ளார்.