அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு...!

Annamalai University Publication of Rankings of Students for Agriculture and Horticulture.

by Balaji, Oct 22, 2020, 10:56 AM IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அனைத்து விவசாய, தோட்டக்கலை பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27 ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்.

இதற்கான விபரங்கள் இரு தினங்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annamalaiuniversity.ac.in) வெளியிடப்படும்.

விண்ணப்பித்த மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்புகளை அறிந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

You'r reading அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு...! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை