காயத்துக்கு பிறகும் பைக் ரேஸ் காட்சியில் நடிக்கும் ஹீரோ.. இன்று முதல் பரபரப்பான ஷூட்டிங்..

Ajith to join Valimai shoot in Hyderabad

by Chandru, Oct 22, 2020, 10:49 AM IST

விஸ்வாசம் படத்துக்குப் பிறகு தல அஜீத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் வலிமை. எச் வினோத் இயக்குகிறார். ஏற்கனவே நேர் கொண்ட பார்வை படத்தை இவர் இயக்கினார். தற்போது 2வது முறையாக அஜீத்துடன் இணைந்திருக்கிறார். அஜித்தின் 60வது படம் வலிமை கடந்த ஆண்டு டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கியது. படத்தின் முக்கிய பகுதிகளை ஹைதராபாத்தில் முடித்த பின்னர் அஜீத் பயங்கரமான ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்பெயின் நாட்டில் படமாக்கக் குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் படப் பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகும் 6 மாதமாக எந்த பணியும் நடக்கவில்லை. கொரோனா ஊரடங்கு தளர்வில் மீண்டும் படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதி தந்த பிறகும் தாமதமாகவே வலிமை படப் பிடிப்பு தொடங்க முடிவானது. தளர்வுக்குப் பிறகு 2 மாதம் கழித்து தற்போது படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஐதராபாத்தில் இப்படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இன்று முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. அஜீத் மற்றும் நட்சத்திரங்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாகின்றன. இதற்காக அஜீத் விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டுச் செல்கிறார். அஜீத் நடிக்கும் முக்கிய காட்சிகள் ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் 25ம் தேதி முதல் படமாக்கப்படும்.இந்த ஆண்டு இறுதிக்குள் வலிமை படத்தை முடிக்கத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க மேலும் சில அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் வலிமை படத்தில் அஜீத் போலீஸ் உயர் அதிகாரியாக நடிக்கிறார். இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் அஜீத் நடிக்கிறார். இரண்டு பாத்திரங்களும் முற்றிலும் மாறுபட்ட குணாதிசயம் கொண்டதாக இருக்கும். ஹீரோயினாக ஹுமா குரேஷி நடிக்கிறார். இவர் ரஜினியின் கபாலி படத்தில் நடித்தவர்.

ஹூமாவும் வலிமை படத்தில் பைக் ரேஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கிறார். அதற்காக பிரத்யேக பயிற்சி பெற்றார்.வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவைக் கவனிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், பைக்-சேஸ் காட்சியின் படப்பிடிப்பின்போது அஜீத்துக்குக் காயம் ஏற்பட்டது. இருப்பினும், ஒரு வாரக் காலத்திற்குள் குணமடைந்து தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அஜீத் தனது ஆக்‌ஷ காட்சிகளில் ரிஸ்க் எடுத்துத் தானே நடிப்பார் டூப் நடிகர்களைப் பயன்படுத்த மாட்டார். ஏற்கனவே இப்படத்திற்காக பைக் ரேஸ் காட்சியில் நடித்த போது காயம் அடைந்தார் அஜீத். ஆனால் மீண்டும் இப்படத்தின் முக்கிய காட்சியாக ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு பைக் ரேஸ் காட்சி படமாக உள்ளது. அதில் துணிச்சலாக அஜீத்தே நடிக்க உள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை