அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் பத்து சதவீத இட ஒதுக்கீடு : புதுவை முதல்வர் தகவல்

தமிழகத்தைப்போலப் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

by Balaji, Oct 27, 2020, 16:23 PM IST

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் , அப்போது அவர் புதுச்சேரி மாநிலத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் 7.5 சதவிகித ஒதுக்கீடு அழிக்கும் மசோதா சட்டமன்றத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுபோல, புதுச்சேரி மாநிலத்திலும் நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் 10 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது கொரானா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதால், பல இடங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே போலப் புதுச்சேரியிலிருந்து தமிழகத்திற்குப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

You'r reading அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் பத்து சதவீத இட ஒதுக்கீடு : புதுவை முதல்வர் தகவல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை