பல் மருத்துவ முதுநிலைப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரும் டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அனைத்து வகை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிந்து, இன்று முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது . இந்த நிலையில்,பல் மருத்துவப்படிப்பில் முதுநிலை பிரிவில் (M.D.S)சேருவதற்கான நீட் தேர்வு வருகிற டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் எனத் தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் https:/nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதுநிலை பல் மருத்துவப்படிப்பு: டிசம்பர் 16ல் நீட் தேர்வு
Advertisement