இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பெயரில் போலி இணையதளம் : கோவில் நிர்வாக அதிகாரி புகார் .

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பெயரில் போலி இனையதளத்தை துவக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

by Balaji, Oct 30, 2020, 16:22 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது இருக்கன்குடி. இணக்குள்ள மாரியம்மன் கோவில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். தற்போது கொரானா தொற்று பரவல் காரணமாக, பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் http://www.tnhrce.gov.in/ என்ற இனையதளம் துவக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென இந்தக் இணையதளம் போலவே போலியான இணையதளம் ஒன்றை சிலர் துவக்கியுள்ளனர். அருள்மிகு மாரியம்மன் கோவில் சர்ச், இருக்கன்குடி என்ற பெயரில் அந்தக் போலி இனையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலின் புகழுக்கு விஷமிகள் சிலர் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாயக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். போலி இணைய தளம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பெயரில், மோசடி வலைதளம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில் உதவி ஆணையாளர் கருணாகரன், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளிடம் புகார் மனு அளித்துள்ளார்.

You'r reading இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பெயரில் போலி இணையதளம் : கோவில் நிர்வாக அதிகாரி புகார் . Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை