உத்தரகண்ட் முதல்வரானா திரிவேந்திர சிங் ராவத் பாஜகவின் 2016 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநில பொறுப்பாளராக அப்போது ராவத் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக ர25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர் உமேஷ் சர்மா என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. ராவத் முதல்வராவதற்கு முன்பாக லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது விசாரணை நடத்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. ஆனால் முதல்வர் திரிவேந்திர ராவத்தை விசாரிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே இதை தடை செய்ய வேண்டும் என்று முதல்வர் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதாகவும், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது என்றும் வேணுகோபால் வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதித்து கடந்த அக்டோபர் 27ம் தேதி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்தக் வழக்கில் எதிர் கட்சிகள் நான்கு வாரங்களில் பதில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.