காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி!

காதலனோடு சேர்ந்து கணவனை கொன்றுவிட்டு குடிபோதையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பாலப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், இவருடைய மனைவி மீனா. கடந்த 23ம் தேதி இரவு தமிழ் செல்வன் மரணமடைந்தார். குடிபோதையில் கீழே விழுந்த தமிழ் செல்வன் இறந்துவிட்டதாக அவரது மனைவி மீனா தெரிவித்தார்.

இதற்கிடையில் தமிழ்செல்வனின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் மீனாவின் செல்போன் உரையாடல்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் மீனாவும் அவரது காதலரும் இணைந்து தமிழ்செல்வனை கொன்று நாடகமாடியது தெரியவந்தது.

இதன்பின், மீனாவின் செல்போன் பேச்சு பதிவுகளை ஆய்வு செய்த போது உண்மை வெளிச்சத்து வந்தது. அதில் மீனாவும் அவரது காதலரும் பேசியது அதிர்ச்சிகரமாக இருந்தது. சுரேஷ் உடன் தவறான தொடர்பில் இருந்த மீனா, தங்களின் உறவுக்கு இடைஞ்சலாக இருந்த தமிழ்செல்வனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி காரியத்தை கச்சிதமாக முடித்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். இதனைத்தொடர்ந்து தமிழ்செல்வனின் உடலை தோண்டி எடுத்து காவல் துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதனிடையே கொலை தொடர்பாக சுரேஷ் என்பவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!