ஒரு மணிநேரம் பொறுங்கள்... என் காதலன் வருகிறார்! - திருமணத்தில் ஷாக் கொடுத்த மணப்பெண்

Advertisement

நீலகிரி மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கோத்தகிரி அருகே உள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரியதர்சினி. இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி திருமணம் இன்று நடைபெற இருந்தது. உற்றார், உறவினர்கள் சூழ திருமணம் எளிமையான முறையில் நடக்கத் தொடங்கியது. மணமகன், மணப்பெண் மணமேடையில் இருக்கும்போது தாலி கட்டுவதற்கு முன்பு அவர்களின் மரபு படி மணப்பெண்ணிடம் சம்மதம் கேட்பது வழக்கமாம். அதன்படி மணப்பெண் பிரியதர்சினியிடம் தாலி கட்டும் முன், சம்மதம் கேட்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு முறை கேட்டபோது, அமைதி காத்த பிரியதர்ஷினி மூன்றாம் முறை கேட்டபோது, ``சம்மதமில்லை'' எனக் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கூடவே, ``ஒரு மணி நேரம் பொறுத்து கொள்ளுங்கள். என்னை திருமணம் செய்து கொள்ள என் காதலன் வருகிறார். எனக்காக திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர் என் காதலன். அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துகொள்ள வேண்டும். இந்த திருமணம் நடந்தால், அவருக்கு நான் துரோகம் செய்தது போல் ஆகிவிடும்" எனக் கூறி அடுத்த அதிர்ச்சியை தந்திருக்கிறார். இவர் இப்படி சொல்லவும் மண்டபத்தில் இருந்தவர்கள் அவரை வசைபாடுகின்றனர். இந்த வீடியோ இப்போது பரவலாக பரவி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>