கொடைக்கான‌லை இனி ஹெலிகாப்ட‌ரில் வலம் வரலாம்...

கொடைக்கானலில் முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்காகத் தனியார் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . நேற்று முதல் இந்த வசதி துவங்கப்பட்டது

by Balaji, Nov 2, 2020, 09:35 AM IST

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் இதுவரை சைக்கிள் சவாரி மற்றும் படகு சவாரிதான் பிரதான அம்சமாக இருந்து வந்தது. தற்போது கொடைக்கானலைப் பறந்தபடி சுற்றிப்பார்க்கத் தனியார் நிறுவனம் ஒன்று ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.ம‌த்திய‌ அர‌சின் அனும‌தியுட‌ன், கோவையைச் சேர்ந்த‌ த‌னியார் நிறுவ‌ன‌ம், ஓய்வு பெற்ற‌ விமான‌ ஓட்டிக‌ளை கொண்டு சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் ஹெலிகாப்டரில் ஏற்றிச்சென்று வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நபர் ஒருவருக்கு ஒருவ‌ருக்கு 6 ஆயிர‌ம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, சோதனை முயற்சியாக அடுத்த 4 நாட்களுக்கு இந்த சேவை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 6 பேர் பயணிக்கக் கூடிய இந்த ஹெலிகாப்டரில் திரும‌ண‌மான‌ தேனில‌வு தம்பதியருக்கு மட்டும் 25 ஆயிர‌ம் ரூபாய் க‌ட்ட‌ண‌ம் நிர்ண‌யம் செய்யப்பட்டுள்ளது.

You'r reading கொடைக்கான‌லை இனி ஹெலிகாப்ட‌ரில் வலம் வரலாம்... Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை