சேலத்தில் மாறுதலாகி சென்ற பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரிக்குக் கீழ்மட்ட அதிகாரிகள் லஞ்சப் பணத்தை வீடு தேடிச் சென்று கொடுத்தனர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.பத்திரப்பதிவு துறையில் சேலம் மண்டல துணைத் தலைவராக இருந்தவர் வி.ஏ. ஆனந்த். இவர் சேலம் அழகாபுரம், கைலாஷ் நகரில் ஒரு வாடகை வீட்டில் இருந்து வந்தார். நேற்று அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 34 பவுன் தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பத்திர பதிவு துறை துணைத் தலைவர் வி.ஏ.ஆனந்த் நேற்று முன்தினம் சேலத்திலிருந்து கடலூர் மண்டலத்திற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். இவர் சேலத்தில் பொறுப்பிலிருந்த காலத்தில் தனது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்றும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகப் பெற்று வந்தார் தனது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்றும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகப் பெற்று வந்தார்.
இந்த நிலையில், இவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டாலும் சேலம் மண்டலத்தில் உள்ள அலுவலக அதிகாரிகள், கடந்த மாத மாமூல் அவரது வீட்டிற்கே சென்று கொடுத்துள்ளனர். அத்துடன் அவருக்கு தங்கக் நாணயங்களையும் அவர்கள் பரிசாக அளித்தனர்.இந்த அன்பளிப்பு விவகாரம் குறித்து ரகசியத் தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், ஆனந்தின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர் .
இதில் அவருக்குக் கீழ்மட்ட அதிகாரிகள் லஞ்சமாகக் கொடுத்த 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 34 சவரன் தங்க நாணயங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் வருகின்றனர்.வேறு மண்டலத்திற்கு மாற்றலாகி செல்லும் நிலையில் பத்திர பதிவு துறை உயர் அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை துறை அதிகாரிகள் மத்தியில் பீதியை உண்டு பண்ணி உள்ளது.