யோகிபாபுவுக்கு அடித்த இரண்டாவது ஜாக்பாட்.. இவருடன் ஹீரோயினாக ஜோடி சேரும் பிரபல நடிகை யார் தெரியுமா??

by Logeswari, Nov 2, 2020, 12:28 PM IST

தமிழ் திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு அவர்கள். இவர் 'யாமிருக்க பயமேன்' என்ற திரைப்படத்தின் மூலம் பன்னி மூஞ்சி வாயா' என்ற கதாபாத்திரமாக அறிமுகமாகி செந்தில், கவுண்டமணி அடுத்த காமெடி வரிசையில் இவர் இடம் பிடித்துள்ளார். இவர் முக்கிய நடிகர்களுடன் காமெடி கதாநாயகனாக நடித்துள்ளார். காமெடி மட்டும் இல்லாமல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து ஹீரோவாகவும் நடித்தார். அதையடுத்து இவர் தற்பொழுது நடித்து வரும் 'மண்டேலா' என்ற படத்திலும் நடிகராக நடிக்கிறார். இவருடன் நடிகையாக ஷீலா ராஜ்குமார் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் சில வருடத்துக்கு முன்பு ஒளிபரப்பாகிய 'அழகிய தமிழ் மகள்' சீரியலில் ஷீலா என்பவர் கதாநாயகியாக நடித்தார்.அப்பொழுது அவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சீரியலுக்கு முழுக்கு போட்டு விட்டு திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து வந்தார். இவர் டூலேட், திரெளபதி போன்ற திரைப்படத்தில் நடித்து பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இதையடுத்து யோகி பாபு நடிக்கும் மண்டேலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தபாகி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு அவர் கூறியதாவது இந்த படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளதால் மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை