திருப்பதி: நடைபாதை வழியாக திருமலை செல்ல தேவஸ்தானம் அனுமதி...!

திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகப் பக்தர்கள் திருமலைக்குச் செல்ல 8 மாதங்களுக்குப் பிறகு தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.

by Balaji, Nov 6, 2020, 15:26 PM IST

கொரானா ஊரடங்கு தளர்வுகளுக்குபின் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.துவக்கத்தில் 300 ரூபாய் கட்டண டிக்கெட் மூலம் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாகத் தினமும் 6000 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை திருமலைக்குப் பேருந்து மற்றும் வாகனங்கள் மூலமே பக்தர்கள் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாகத் திருமலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல் இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாகப் பக்தர்கள் வந்து செல்ல தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.


தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்துள்ளது.வனத்துறை மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அந்த பாதையில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இதையடுத்து கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் அப்பாதை வழியாகத் தினமும் காலை 6 மணி முதல் மாலை 4 வரை பக்தர்கள் செல்ல அனுமதி தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. .

You'r reading திருப்பதி: நடைபாதை வழியாக திருமலை செல்ல தேவஸ்தானம் அனுமதி...! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை