சம்மு - அனிதா ஆர்கியுமெண்ட், பிக் பாஸ் எப்ஃஎம் ஸ்டேஷன் - பிக் பாஸின் 33வது நாள்

Advertisement

ஆத்தங்கரை ஓரத்தில பாட்டோட ஆரம்பித்தது நாள். மார்னிங் டாஸ்க்ல தேங்கா, மாங்கா, பட்டாணி, சுண்டல் விக்கறது தான் டாஸ்க்.அர்ச்சனா தான் முதல்ல வந்தாங்க. நேத்து நாள் முழுவதும் அர்ச்சனா தான். காலைல இந்த டாஸ்க்ல ஆரம்பிச்ச உற்சாகம் நைட் எப் எம் டெக் வரைக்கும் சும்மா கிழி.

சாம், பாலா, ரமேஷ், நிஷா எல்லாரையும் ஜாலியா கலாய்ச்சாங்க. பாலாவை ஹெல்புக்கு கூப்பிட்டு ஷிவானிக்கு சுண்டல் கொடுக்க சொன்னது தேவையில்லாத ஆணி.

அடுத்து ஜித்தன் ரமேஷ். ஒரு மாதிரியா செஞ்சு முடிச்சாரு. அடுத்து ஆரி, சுண்டல் விக்கறதையும் விறைப்பா இருந்து தான் செய்வாரு போல. அவரு சுண்டல் விக்கும் போது, சாம் + கேப்பி பேசிட்டு இருக்க "இப்ப நான் நடிக்கறதா, வேணாமானு" ரெண்டு தடவை கேட்டு, முறைச்சு பார்த்துட்டு போய்ட்டாரு.

பாத்ரூம் கதவை தட்டி காமெடியா ஏதோ ட்ரை பண்ணிட்டு இருந்தார் ரியோ. ரொம்ப நாள் கழிச்சு நேத்து ரியோவும் உற்சாகமா இருந்தா மாதிரி தான் தோணுச்சு.நேத்து கண்டண்ட் கொஞ்சம் குறைவுங்கறதால அன்சீன்ல பார்த்த சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.

ஆரி - சாம் கேஸ்ல ஆரி தன் குரூப்பிசம் பண்றாருனு ஒரு பாயிண்ட் பேசினதை பத்தி, சாமுக்கும் அனிதாவுக்கும் ஒரு ஆர்கியுமெண்ட் வருது. குரூப்பிசம்னு எப்படி சொல்லலாம்னு சாம் கிட்ட கேக்க, "அது என்னோட கருத்துனு சொல்லிடறாங்க. ஆனாலும் அனிதா விடாம கேட்டு, அந்த டாபிக் மாறிப்போய், "நீங்க செய்யறது தான் அசிங்கம், நீங்க செல்பிஷ்" அப்படினு வார்த்தையை விட்டாங்க அனிதா. அதுக்கப்புறம் சாம் அந்த விவாதத்த வளர்த்தவே இல்லை. ஆனா அங்கிருந்த ரியோ, சோம் ரெண்டு பேருமே அனிதா உபயோகப்படுத்தின வார்த்தை தப்பானதுனு கண்டிச்சாலும், அனிதா கேக்கறதா இல்லை. ரியோ கிட்ட கூட சண்டைக்கு போடுறா மாதிரி பேசறாங்க.

அதுக்குள்ள இந்த விஷயம் மத்தவங்களுக்கு தெரியுது. அந்த குறிப்பிட்ட கேப்டனசி டாஸ்க்ல "எந்த விதிமுறைகளும் கிடையாது" அப்படினு டாஸ்க் நோட்ல கூட இருந்தது. அதை தெளிவா சொன்னாங்க. ஆனா ஆரி திரும்ப திரும்ப சொல்லி, இப்ப அனிதாவும், சாம் கேப்டன் ஆனதை அசிங்கம்னு சொல்றாங்க.

கிச்சன்ல ரம்யாவும் அர்ச்சனாவும் தன் கருத்தை சொல்றாங்க. இதுல செல்பிஷ்னு சொல்றதுக்கு என்ன இருக்கு. இங்க இருக்கற எல்லாருக்குமே செல்பிஷ்னெஸ் இருக்குனு ரம்யா சொன்ன பாயிண்ட் சரியானது.

ஆரி, சோம் கூட ஒரு சின்ன மீட்டிங். நேத்து ஜட்ஜ்மெண்ட் கொடுக்கும் போது ஆரி கார்னர் செய்யப்படறாருனு ஜட்ஜ் கை தூக்க சொன்னப்போ, சோம் இல்லைனு கை தூக்கிருக்காரு. அதை பத்தி சோம் கிட்ட விசாரணை பண்ணிட்டு இருந்தாரு. ஆரி என்ன கேள்வி கேக்கறாருனே சோம்க்கு புரியல. இந்த வீட்ல என்ன நடக்குதுன்னே தெரியாம கை தூக்கினியானு, ஆரி கேட்ட அந்த டோன், அந்த பாடி லாங்வேஜ் ஆரியோட சய்ட்டர்ஸ்க்கானது.

ஆனா சோம் தெளிவான காரணம் சொன்னார். ஆரி தனியா படுத்து தூங்கறாரு, டாஸ்க் இல்லாத மத்த டைம்ல கூட தனியா வெளிய உக்கந்துக்கறாரு. யாரோடவும் கலந்துக்கறதில்லை. இந்த காரணத்துக்காக தான் நான் உன்னை எதிர்த்து ஓட்டு போட்டேன்னு சோம் ஸ்ட்ராங்கான காரணம் சொல்றாரு.

இந்த பாயிண்ட்ஸ் ரொம்ப முக்கியமானது. இதே பாயிண்ட்ஸை அர்ச்சனாவிம், சுச்சியும் பேசும் போது, அர்ச்சனா இதே பாயிண்ட் சொல்றாங்க. அவர் யூஸ் பண்ற கப் கூட தனியா தான் இருக்கு. அவர் தான் அவரையே தனிமைபடுத்திக்கறாரு. ஆனா வெளிய தன்னை கார்னர் செய்யறாங்கனு சொல்றாருனு சொன்னாங்க.

நேத்து நிஷாவோட கேஸ் நட்க்கும் போது நிஷா & ரியோ பேசினது நினைவிருக்கலாம். ஆரி தனியா உக்காந்துட்டு இருந்த போது, அவரை உள்ள கூப்பிடலாம்னு சொன்னேன், இது நிஷாவோட ஸ்டேட்மெண்ட்.

அதே மாதிரி அன்சீன்ல சோம், ரியோ, ரமேஷ் மூணு பேரும் பேசற ஒரு சீன் வருது. சோம் கிட்ட கை தூக்கினதை பத்தி கேட்டா மாதிரியே, ரமேஷ் கிட்டயும் கேட்ருக்காரு ஆரி. அப்ப "உனக்கு தாம்பா கை தூக்கினேன்னு" சொல்லி எஸ்கேப் ஆகிருக்காரு ரமேஷ். இதை ரமேஷ் சொல்றாரு. ஆனா அது உண்மையில்லை. சோம் மாதிரியே ரமேஷும் ஆரிக்கு எதிரா தான் ஓட்டு போட்ருக்காரு. ஆனா ஆரிகிட்ட இதை பத்தி மேற்கொண்டு பேச வேண்டாம்னு பொய் சொல்லிட்டாரு. "உனக்கு பொய் சொல்லத் தெரியாதானு சோம் பார்த்து கேட்டது ஹைலைட்.

இந்த விஷயத்துக்கு இன்னொரு ஆதாரம், சம்யுக்தாவோட பையன் பர்த்டே காட்சி. ஹவுஸ்மேட்ஸ் அத்தனை பேரும் லிவிங் ஏரியால இருந்த போது, ஆரி மட்டும் வெளிய தனியா இருக்கற ஒரு ப்ரேம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

தன்னை கார்னர் செய்யறாங்க சனிக்கிழமை கமல் சார் முன்னாடி சொல்லிட்டு, நேத்து அதை பத்தின கேஸ் வந்த போது, இந்த வாரம் நடந்த விஷயத்தை மட்டுமே பேசினாரு ஆரி.அதே மாதிரி வீட்ல இருக்கறவங்க என்னை கார்னர் செய்யறாங்கனு சொன்னதுக்கு அவருக்கு யாரும் ஆதரவா இல்லை. புதிய கூட்டணி சனம், அனிதா மட்டும் தான் ஆதரவு.

சுரேஷ் vs கேப்பி & சாம் பிரச்சினையை பெருசு பண்ணிட்டே இருக்காரு சுரேஷ். பார்க்கிற எல்லார்கிட்டயும் சாம் செஞ்சது தப்புனு நியாயம் பேசிட்டு இருந்தாரு. இந்த வாரம் சனம், பாலா, ஆரி, சாம் இவங்க எல்லாம் இந்த வாரம் ஸ்கோர் பண்ணிட்டாங்க. கமல் சார் இவங்க கூடத்தான் பேசப் போறாரு. சுரேஷும் ஏதாவது செஞ்சு தன்னோட இருப்பை காமிச்சுக்க இதை செய்யறாரோனு தோணுது.

RKG நெய் வழங்கிய செஃப் போட்டி. அர்ச்சனா & நிஷா, சனம் & அனிதா ரெண்டு டீமும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு ஏதவது ஒரு டிஷ் செய்யனும்.

அர்ச்சனா டீம் பொங்கலும், அனிதா டீம் கேசரியும் செஞ்சாங்க.

ரெண்டு டீமும் ஒரு முடிவுக்கு வராததால கேப்டனை முடிவு அறிவிக்கச் சொன்னாரு பிக்பாஸ். பொங்கல் அணி ஜெயிச்சதா சொன்னதை ஆரி, அனிதா டீம் ரசிக்கவே இல்லை.

இந்த டாஸ்க் லெட்டரை படிச்சுட்டு விதிமுறைகளை சுவையா விளக்கி சொன்ன அர்ச்சனாவை பாராட்டினார் பிக்பாஸ்.

அடுத்து பிக்பாஸ் எப்ஃஎம் டாஸ்க். சுசித்ரா & அர்ச்சனா தான் ஆர்ஜெவா இருந்தாங்க. என்ன காரணமோ தெரியல சுச்சி அடக்கி வாசிக்க அர்ச்சனா 10000 வாலா பட்டாசு மாதிரி தூள் கிளப்பிட்டாங்க. 14 பேரையும் இண்ட்ரோ கொடுத்ததே செம்ம. ஆரம்பத்துல இருந்து இறுதி வரை அர்ச்சனா தான் இந்த டாஸ்க்கோட வின்னர்.

சுச்சிக்கு என்னாச்சுனு தெரியல. இந்த ப்ரொகிராம் முடிஞ்ச உடனே அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. தான் சரியா செய்யலைனு. நைட் பாலா கிட்ட உக்காந்து புலம்பிட்டு இருந்தாங்க.

இந்த டாஸ்க்கின் போது பாலாவும், ஷிவானியும் ஒன்னா தான் உக்காந்துட்டு இருந்தாங்க. அப்ப அர்ச்சனா இவங்களை சேர்த்து வச்சு ஏதோ பேசினதை வச்சு ஒரு ஆர்கியுமெண்ட் ஓடிட்டு இருந்தது. ரெண்டு பேரும் ஒன்னாவே இருந்தா பேசத்தான் செய்வாங்க. அதுவும் இங்க செய்ய அதெல்லாம் கண்டண்ட்க்குனு ஆகிபோச்சு.

அர்ச்சனா கூட தனியா பேசறாரு பாலா. நானும் ஷிவானியும் ஒன்னா இருக்கறது, நடக்கறது மட்டும் தான் காட்டறாங்க. பேசறதை காட்டறதில்லை. ஏன்னா நாங்க பேசற விஷயம் வேற. எனக்கு ஷிவானி மேல எந்த அட்ராக்சனும் இல்லை. நான் ஜஸ்ட் சப்போர்ட் பண்றேன்னு சொல்றாரு பாலா.

அதுக்கப்புறம் பாலாவும், ஷிவானியும் டைனிங் டேபிள்ல பேசறாங்க. எப்ஃஎம் டாஸ்க்ல அர்ச்சனா பேசும் போது, "இந்த வீட்டோட ரெபரசண்டேட்டிவ்" அப்படினு ஒரு வார்த்தை சொல்லிருக்காங்க. அதை விமர்சிச்சு பேசறாரு பாலா. ஒவ்வொருத்தர் பேசற வார்த்தைகளையும் பாலா எவ்வளவு உன்னிப்பா கவனிக்கறாருங்கறதுக்கு இந்த பாயிண்ட் ஒரு உதாரணம்.

அம்மா - மகன் செண்டிமெண்ட் எனக்கு வேண்டாம்னு சொல்லப் போறேன்னு ஷிவானிகிட்ட சொல்லிட்டு இருக்காரு பாலா.

கடைசில நீங்க கொடுக்கற வாய்ஸ் ஓவர் கொடூரமா இருக்குங்க பிக்பாஸ். முடியல.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>