ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் கமல்ஹாசன் பங்கேற்க முடிவு

Mar 29, 2018, 17:34 PM IST

தூத்துக்குடியில், வரும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்த்து தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மக்கள் மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தமிழகம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஸடெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு உள்பட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. காவரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்றே கடைசி தேதி என்ற நிலையில், மத்திய அரசு வாய்த்திறக்காமல் உள்ளது. இதுதொடர்பாக, இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி பங்கேற்க செல்கிறேன். அங்கு, மக்களோடு ரோராட்டத்தில் பங்கேற்க உள்ளேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமான பணி அல்ல. மத்திய அரசு நினைத்தால் காவிரி வாரியத்தை எளிதாக அமைக்கலாம். மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடிக்கு அதிகாரம் உள்ளது. தமிழக விவசாயிகளின் அடிப்படை தேவை என்ன என்பதை அரசு பார்க்க வேண்டும். காவிரி விவகாரத்தில், முன்கூட்டியே மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வோம் என அதிமுக எம்பிக்கள் கூறுவது அரசின் பித்தலாட்டம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஓட்டு விளையாட்டு. காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்தை ஆதரிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் கமல்ஹாசன் பங்கேற்க முடிவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை