என்னை மன்னித்து விடுங்கள் - கண்ணீர் மல்க பேட்டியளித்த ஸ்மித்

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் பந்தை விதிகளுக்குப் புறம்பாக சேதப்படுத்தியது அம்பலமானது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

Mar 29, 2018, 17:12 PM IST

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் பந்தை விதிகளுக்குப் புறம்பாக சேதப்படுத்தியது அம்பலமானது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பேட்ஸ்மேன் பேங்க்ராஃப்ட் ஆகியோர் உடனடியாக சொந்த நாட்டுக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால், இவர்களின் பதவி பறிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஸ்மித் ஒரு டெஸ்டில் விளையாட தடை, 100 சதவீத சம்பளம் அபராதமாக விதித்தது. பான்கிராப்டுக்கு, 75 சதவீத சம்பளம் மட்டும் அபாராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த சம்பவம் குறித்து அதிருப்தி அடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு, ஸ்மித், வார்னர் இருவரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 12 மாதங்கள் தடை விதித்தது. மேலும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவர்கள் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக செயல்படவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டீவன் ஸ்மித், “இது எனது தலைமைக்கு ஏற்பட்ட தோல்வியாகும். ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். நான் கிரிக்கெட் விளையாட்டை நேசிக்கிறேன். நான் விரும்பும் கிரிக்கெட் விளையாட்டை ஆட விரும்பும் இளம் வீரர்களையும் நேசிக்கிறேன்.

எனது அனைத்து அணி வீரர்களிடமும், உலகத்தின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும், இதனால், ஏமாற்றம் அடைந்துள்ள, கோபமடைந்துள்ள அனைத்து ஆஸ்திரேலிய மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஒரு அணியின் கேப்டனாக நான் அனைத்துக்கும் பொறுப்பேற்று கொள்கிறேன்.

மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்பதை தற்போது உணர்ந்துவிட்டேன். என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது. இதனால் என் மனம் உடைந்துவிட்டது. ஓர் அணி கேப்டன் என்ற முறையில் நான் தோற்றுவிட்டேன். எனது நாட்டை முன்னிலைப்படுத்துவதற்கான பெருமையைப் பெற்றிருந்தேன்.

கிரிக்கெட்தான் என் வாழ்க்கை. அது மீண்டும் கிடைக்கும் என்று நம்புகிறேன். இதற்காக நான் யாரையும் குறை சொல்லப்போவதில்லை. ஒரு வகையில் மற்றவர்களுக்கு இது ஒரு பாடம் ஆகும். அதேவேளையில் இது ஒரு மாற்றத்திற்கான காரணமாக இருக்கலாம் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தோடியது. இடையில் அவரை கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading என்னை மன்னித்து விடுங்கள் - கண்ணீர் மல்க பேட்டியளித்த ஸ்மித் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை