ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்8 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது

Mar 29, 2018, 16:57 PM IST

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்8 ராக்கெட் இன்று இஸ்ரோவால் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

தகவல் தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை கண்காணிக்கவும் ஜிசாட்-6ஏ என்னும் புதிய செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி. எப்8 ராக்கெட் உதவியுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மைய 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 4.56 மணிக்கு ஏவப்பட்டது. இது ஏவப்பட்டு 17 நிமிடத்தில் விண்ணில் நிலை நிறத்தபட்டுள்ளது.  

415.6 டன் எடையும் 49.1 மீட்டர் உயரமும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. எப்8 ராக்கெட் 2140 கிலோ எடை உடைய ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை சுமந்து சென்றது. செல்போன் சிக்னல்கள் மற்றும் அதற்கும் சிறிய மின்னணு சாதனங்களில் இருந்து வரும் சிக்னல்களை துல்லியமாக பெற்றுத்தரும் ஆன்டெனா ஒன்று இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

அஹமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் எஸ்.பேண்ட் தகவல் தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டத்தில் பெரிய ஆன்டெனா ஒன்று தயாரிக்கப்பட்டு, ஜி.எஸ்.எல்.வி. எப்8 ராக்கெட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ தயாரித்த ஆன்டெனாக்களில் இது தான் மிக பெரியது. இந்த செயற்கைகோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் மட்டுமே இயங்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சரியாக, நேற்று மதியம் 1.56 மணிக்கு கவுண்டவுன் தொடங்கப்பட்ட நிலையில், இன்று மாலை சரியாக 4.56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சரியான சுற்றுவட்டாரத்தில் ராக்கெட் பயணம் செய்கிறதா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிரமாக கண் காணித்து வருகின்றனர். இஸ்ரோ தலைவராக கே.சிவன் பொறுப்பேற்று செலுத்தப்படும் முதல் ராக்கெட் இதுவாகும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்8 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை