அம்பேத்கர் பெயரில் ராம்ஜியை சேர்க்க உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு ஆணை பிறப்பித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்திய அரசியலமைப்பினை இயற்றிய அம்பேத்கரின் பெயரில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் என்பதற்கு பதிலாக டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என மாற்ற உத்தர பிரதேச அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, அனைத்து அரசு துறை அலுவலகங்கள், அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் லக்னோ அமர்வு ஆகியவற்றில் உள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் பதிவுகளிலும் ராம்ஜி என்ற பெயரை சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச ஆளுநர் ராம்நாயக் பரிந்துரையின்பேரில் யோகி ஆதித்யநாத்தின் அரசு அம்பேத்கரின் பெயரில் ராம்ஜி என்ற வார்த்தையை சேர்க்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ராம்ஜி என்பது அம்பேத்கரின் தந்தை பெயர் ஆகும். மேலும் இந்திய அரசியல் சாசன பக்கங்களில் அம்பேத்கர் ராம்ஜி பீம்ராவ் என்றே அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.