நாகர்கோவிலில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை : எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு

நாகர்கோவிலில் முதலமைச்சர் தலைமையில் நடந்த மாவட்ட அளவிலான வளர்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தை அம்மாவட்டத்தில் உள்ள திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்

by Balaji, Nov 10, 2020, 18:44 PM IST

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவிலில் நடந்த அரசு சார்பிலான நிகழ்ச்சியில் 60 கோடியே 44 கோடி ரூபாய் முதலீட்டில் 36 புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 154 கோடி மதிப்பிலான 21 முடிவடைந்த திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார்.பல்வேறு துறைகள் சார்பில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2736 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

பின்னர் மாவட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் உட்படப் பலர் கலந்து கொண்டனர் .

அதேசமயம் இந்த ஆய்வுக் கூட்டத்தைக் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களான சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ. தங்கராஜ் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான பிரின்ஸ், ராஜேஷ் குமார், விஜயதரணி ஆகியோர் புறக்கணித்தனர்.

You'r reading நாகர்கோவிலில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை : எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை