திமுக அழைப்பு விடுத்தால் யோசித்து முடிவெடுப்போம் - டிடிவி தினகரன்

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். திமுக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்தால், பங்கேற்பது குறித்து முடிவெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Mar 30, 2018, 18:04 PM IST

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். திமுக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், பங்கேற்பது குறித்து முடிவெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் 120 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடந்தது. இந்த விழாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.கே.நகர் தொகுதி சுயேட்சை உறுப்பினர் டி.டி.வி. தினகரன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்றது; இது மக்களை ஏமாற்றும் செயல்.

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். திமுக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்தால், பங்கேற்பது குறித்து முடிவெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading திமுக அழைப்பு விடுத்தால் யோசித்து முடிவெடுப்போம் - டிடிவி தினகரன் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை