காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 2ம் தேதி அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, நேற்றுடன் காலக்கெடு முடிவடைந்தது. இருப்பினும், மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காமல் காலம் தாழ்த்தியது. இதற்கு, அதிமுக, திமுக என அனைத்து கட்சியினரும் மத்திய அரசை எதிர்த்து வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று எடப்பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். திமுக உள்ளிட்ட கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், காவரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ
திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதே தினத்தில், அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.