தேர்தலுக்கு தயாராகும் அதிமுக.. பொறுப்பாளர்களை நியமித்தது..

by எஸ். எம். கணபதி, Nov 13, 2020, 12:40 PM IST

அதிமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உள்பட முக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. தேர்தலுக்கு ஐந்தாறு மாதங்களே உள்ள நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பொறுப்பாளர்களையும், புதிய மாவட்டச் செயலாளர்களையும் நியமித்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. இதே போல், அதிமுகவிலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதியவர்களுக்கும் மாவட்டச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கைக் குழு, பிரச்சாரக் குழு போன்றவற்றையும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர். இதன்படி, அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, கோகுல இந்திரா, அன்வர்ராஜா மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி.வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரக் குழுவில், தம்பிதுரை, வைகைச்செல்வன், பு.தா.இளங்கோவன் ஆகியோரும், ஊடகம் மற்றும் செய்தியாளர்களை சந்திக்கும் குழுவில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், காமராஜ், உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் கொ.ப.துணை செயலாளர் வைகைச் செல்வன், பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளுக்கு பதில் அளிக்கும் குழுவில், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செம்மலை, டாக்டர் விஜயபாஸ்கர், வைகைச்செல்வன், ரபி பெர்னார்ட், மருது அழகுராஜ், ஆர்.எம்.பாபு முருகவேல் ஆகியோரும், ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக ரபி பெர்னார்ட், மருது அழகுராஜ் ஆகியோரும், இணை ஒருங்கிணைப்பாளராக அஸ்பயர் சுவாமிநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

You'r reading தேர்தலுக்கு தயாராகும் அதிமுக.. பொறுப்பாளர்களை நியமித்தது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை