மதுரை வரிச்சூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம். உடம்பு முழுக்க தங்க நகைகளை அணிந்துகொண்டு இவர் செல்வது போன்ற புகைப்படங்கள் வலைத்தளங்களில் அவ்வப்போது பார்க்கலாம். போலீஸின் ஹிட் லிஸ்ட்டில் இருந்து பின்னர் என்கவுண்டரில் தப்பித்தவர் இந்த செல்வம். தற்போது ரவுடியிஸத்தில் இருந்து விலகி வாழ்ந்து வருவதாக சொல்கிறார். இவர் அவ்வப்போது அட்ராசிட்டி செய்து வலைதளங்களில் ட்ரெண்ட் ஆவது வழக்கம். காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலுக்கு விஐபி வரிசையில் சென்று தரிசனம் செய்து ட்ரெண்ட் ஆனார். அப்போது, `நான் ரவுடியே கிடையாது. விஐபி. இன்கம் டாக்ஸ் எனக்கு 2 கோடி ரூபாய் அபராதம் போட்டாங்க. நான் விஐபி இல்லன்னா 2 கோடி ரூபாய் அபராதம் போட்டிருப்பார்களா?" என அவர் பேசியது ஏகபிரபலமானது.
இந்நிலையில் இந்த கொரோனா காலத்திலும் தனது அட்ராசிட்டியை நிறுத்தவில்லை. கொரோனாவால் அனைவரும் முக கவசம் அணிந்து வரும் நிலையில், வரிச்சூர் செல்வம் தங்கத்தில் முகக்கவசம் அணிந்துள்ள புகைப்படம் தற்போதைய ஹாட் ட்ரெண்ட். இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து வரும் அவரது ஆதரவாளர்கள், `உலகத்திலேயே முதல் முறையாக தங்கத்தில் முகக்கவசம் அணிந்தவர் நம்ம அண்ணன்தான்" எனப் பெருமை பொங்க பரப்பி வருகிறார்கள்.