சசிகலா கணவர் நடராஜன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பரோலில் வந்த வெளிவந்த சசிகலா மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு மீண்டும் சென்றார்.
உடல்நலக் குறைவு காரணமாக புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 20ஆம் தேதி காலமானார்.
அவரது உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊர் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தனது கணவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோலில் வந்தார்.
இந்நிலையில், கணவர் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பரோலில் வந்த சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு மீண்டும் புறப்பட்டார். தஞ்சையில் இருந்து சிறைக்கு காரில் சசிகலா செல்கிறார். அவரது பரோல் காலம் முடிவடையும் முன்னரே அவர் சிறை செல்கிறார்.
பரோல் முடியும் முன்பே சசிகலா சிறைக்கு திரும்பியது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக தஞ்சையில் தங்கி இருந்த சசிகலாவிற்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை, மருத்துவர் சசிகலா உடல் ரீதியாக சோர்வாக உள்ளார் என்றும் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சொத்துப் பிரச்சனை மற்றும் வீடியோ வெளியீடு என தொடர்ந்து சொந்தங்களுக்கு உள்ளாகவே ஏற்பட்ட மோதல். இதன் காரணமாக ஏற்பட்ட குடும்ப ரீதியான மனக்கசப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர் மனச் சோர்வு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணத்திற்காக சிறைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது.