அருந்ததிராய் புத்தக விவகாரம் : நெல்லை பல்கலைக்கழக கூட்டம் ரத்து

by Balaji, Nov 17, 2020, 12:55 PM IST

நெல்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதல் புதிய பாடத்திட்ட குழுவின் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரத்து செய்யப்பட்டது. நெல்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதல் புதிய பாடத்திட்ட குழுவின் கூட்டம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரானா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்திய அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டி இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.

15 உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவில் 6 பேர் மட்டுமே இன்று நடந்த ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆயினும் இந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது இணையதள தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூட்டம் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த கூட்டத்திற்கு சமூக அமைப்புகள் மற்றும் மூட்டா அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்ததை தொடர்ந்தே இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை